புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டை ஸ்ரீ வன்னிய பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. இக்கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இந்திர விமானம், சூரிய பிரபை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் அனுமன், யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ச்சியாக சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் , திருவெண்ணெய்த்தாழி, மாலை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உத்ஸவம் நேற்று காலை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேரில் சுவாமி, தாயார் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர்