வள்ளியூர் : வள்ளியூர் முருகன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.28) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றன.இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து கோயில் தலைமை பட்டர் கொடியேற்றுகிறார். தொடர்ந்து திருவிழா நாள்களில் சுவாமியும் அம்பாளும் மயில், கலைமான், கிடாய், பூதம், கிளி, வெள்ளிமயில், யானை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9-ம் திருநாளான மே 6-ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.