குபேர பொம்மை என்ற பெயரில், வீடுகளில் பலரும் கையை உயர்த்தி சிரிக்கின்ற பொம்மைகளை வீட்டில் வைத்துள்ளனர். இதைப் பற்றிய குறிப்புகள் புத்தமத இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் சிரிக்கும் நிலையில் உள்ள குண்டு குபேரன் சிலையை, கண்திருஷ்டி போவதற்காக வழிபடுகின்றனர். குள்ளஉருவம், கள்ளமில்லாத சிரிப்பு, கனத்த தொப்பை,கையில் பொன்மூட்டை, ஆபரணங்கள் என பொன் நிறத்தில் இவர் காட்சியளிக்கிறார். இந்த பொம்மை இருக்கும் இடத்தில் செல்வவளம் நிறைந்திருக்கும் என்ற சீனமக்கள் நம்புகின்றனர்.