ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று காலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நமது தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து நடராஜர் முன் பூஜை நடக்கும். பின் அந்தக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித் தட்டில் வைத்து வெளியே எடுத்து வருவார் கோயில் தீட்சிதர். பிறகு அக்கொடியை சிதம்பரம் நடராசர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்வார்கள்.