ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரூ.50.12 லட்சம் வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2014 12:04
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், ரூ.50 லட்சத்து 12 ஆயிரத்து 887 ரொக்கம், 31 கிராம் தங்கம், மூன்றே கால் கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. இணை கமிஷனர் செல்வராஜ், கோயில் கட்டுமான பணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின், பேஷ்கார்கள் கண்ணன், கமலநாதன், அண்ணாத்துரை, ராதா மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.