திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில்உள்ள மதியாதகண்ட விநாயகர், அழகுசவுந்தரிஅம்மன் கோயில் உள்ளது. இங்கு, மே 4-ல்மகா சண்டிஹோமம் நடக்கிறது. உலக மகாசேமம் மற்றும் வருண பகவானை வேண்டியும்இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. சிவாச்சாரியார்கள் 25 பேர் பங்கேற்று,பூஜைகள் செய்கின்றனர். மே 3 அன்று மாலை 5மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது.இரவு 7:30 மணிக்கு பக்தி சொற்பொழிவு, மே 4அன்று காலை 7:30 மணிக்கு ஹோமம் நடைபெறும். காலை 9 மணிக்கு மகா சண்டிஹோமமும் நடக்கிறது. இக்கோயிலில், 30 ஆண்டுகளுக்கு பின், இந்த ஹோமம் நடக்கஉள்ளது.