திருமலை பெருமாளுக்கு 9 கோடி நன்கொடை அளித்த அமெரிக்க பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2025 04:11
திருப்பதி; அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஸ்ரீ மண்டேனா ராமராஜு என்பவர் தனது மகள் மண்டேனா நேத்ரா, மருமகன் வம்சி ஆகியோரின் பெயரில், திருமலைப் பக்தர்கள் தங்கும் விடுதிகளை நவீனப்படுத்தும் பணிக்காக ரூ.9 கோடி நிதியுதவி வழங்கினார். ஸ்ரீ மண்டேனா ராமராஜு 2012ஆம் ஆண்டு ரூ.16 புள்ளி 06 கோடி ரூபாய் இதே போல திருமை மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கியவர். அவருக்கு திருமலையில் அதிகாரிகள் பராட்டுவிழா நடத்தினர்,அப்போது வருங்காலத்தில் ராமலிங்கராஜீ இனனும் நன்கொடை தருவதற்கு வேண்டிய ஆசிகளை பெருமாள் அருளட்டும் என்றனர்.