கல்லக்குடி: திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 2–ந்தேதி காப்புகட்டி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 6மணியளவில் பூச்சொரிதலும் மகாஅபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து 3–ந்தேதி காலை 9 மணியளவில் ஏரிக் கரையிலிருந்து தீர்த்தம், பால்குடம், அக்னிசட்டி, உடலில் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று கோயிலில் மாலை 4மணியளவில் சந்தனகாப்புடன் மகாஅபிஷேகம் நடைபெற்றது.4–ந்தேதி காலை 10 ணியவில் பொங்கல், மாவிளக்கு வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று முக்கிய வீதிகளில் சாமி திருவீதிஉலா வந்தது. இன்று காலை மஞ்சள் நீராட்டுவிழாவுடன் சாமிகுடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.