பதிவு செய்த நாள்
06
மே
2014
12:05
திருப்புத்தூர் : திருப்புத்தூர் பூரண புஷ்கலை சமேத கூத்த அய்யனார் கோயில் திருப்பணி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக,கோயில் பாலாலயம் நடந்து, திருப்பணி துவங்கியது.நேற்று காலை, கோயில் நிலைக்கால் நிறுவும் பணி துவங்கியது. திருப்புத்தூர்,புதுப்பட்டி,தம்பிபட்டி கிராமத்தினர் முன்னிலையில்,ஸ்தபதி கார்த்தி சகோதரர்கள், பொறியாளர் அருணாச்சலம் நிலைக்கால் நிறுவும் பணி நடந்தது. திருப்பணியில், அய்யனார், பூரண புஷ்கலை அம்மன்,சின்னக் கருப்பர்,பெரிய கருப்பர்,நொண்டிக் கருப்பர், பேச்சி,ராவுத்தர், ஆஞ்சநேயர்,சன்னாசி சன்னதிகள் திருப்பணி நடைபெற உள்ளது. சுமார் ரூ 60 லட்சம் மதிப்பில், 50 ஆண்டுகளுக்குப் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது.