வாழ்வில் வளம் கூட்டுவிக்கும் நான்கு முக முருகன் வடிவத்தை சவுரபேய திருவுரு என்பர். இவருக்கு நான்கு முகம், எட்டு கைகள் உண்டு. வலக்கைகளில் சக்தி, நீலோற்பவம், மலர்அம்பு, அபயம் இருக்கும். இடக்கைகளில் வஜ்ரம், கரும்புவில், சூலம், வரதம் இருக்கும். தாமரை மலரில் அமர்ந்திருப்பது போல் இவரை படைப்பதும் உண்டு. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் நான்முக முருகனை தரிசிக்கலாம்.