Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கறம்பக்குடியில் மங்கள விநாயகர் ... மதுரை சித்திரை திருவிழா: இன்று திக் விஜயம்! மதுரை சித்திரை திருவிழா: இன்று திக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர சக்க தேவி கோயில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2014
05:05

தூத்துக்குடி,: தூத்த்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா நாளை  ( மே 9) துவங்குகிறது.    இன்று (மே 8)மாலை 6 மணிமுதல் மே 10 மாலை ஆறு மணிவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவினை கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சலங்குறிச்சி கோட்டை பகுதியில், மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் இரு நாட்கள் திருவிழா நடத்தப்படும். வீர சக்கதேவி கோயில் திருவிழா இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இந்த திருவிழாவில் கட்டபொம்மன் வம்சாவாளியினர் தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்பார்கள்.
கலை நிகழ்ச்சிகளுக்கு தடை: தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் இருப்பதால் திருவிழாவில் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது. கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகக் குழுவினர் விழா அமைதியாக நடக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
144 தடையுத்தரவு: கோயில் திருவிழாவின் போது தங்களது வீரத்தினை காட்டுவதற்காக கத்தி, சுருள் கத்தி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் வருகை தருவார்கள். இம் முறை ஆயுதங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மே. 8 மாலை 6 மணிமுதல் மே 10 மாலை ஆறு மணி வரை 144 தடையுத்தரவு அமலில் இருக்கும், என கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். வேறு கூட்டங்கள் நடத்த வேண்டும் , என்றால் எஸ்.பி., யிடம் முன் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar