கறம்பக்குடி: கறம்பக்குடி– திருவோணம் சாலையில் மங்கள விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா மற்றும் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவை யொட்டி விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை , மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.மாலையில் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான ஆண்களும், பெண்களும் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து சாமி கும்பிட்டனர்.