பதிவு செய்த நாள்
09
மே
2014
01:05
காஞ்சிபுரம் : உலகளந்தபெருமாள் கோவிலின், உடைந்த தேர் சக்கரங்களுக்கு பதிலாக, புதிய இரும்பு சக்கரங்கள் பொருத்த 4.22 லட்சம் செலவில், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், இந்த கோவில் ஆண்டு பிரம்மோற்சவத்தின்போது, திருத்தேர் உற்சவம் நடந்தது. அப்போது, முன் சக்கரம் உடைந்து, தேர், நடுவழியில் நின்றது. பின்னர், தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, தேர், நிலை நிறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து, தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதனால், 4.22 லட்சம் செலவில் புதிய இரும்பு சக்கரங்கள் தயாரிக்க, கோவில் நிர்வாகத்தினர் திட்டமதிப்பீடு தயார் செய்துள்ளனர்.