கொத்தவால்சாவடி: வாசவி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் இன்று நடக்கஉள்ளது. கொத்தவால்சாவடியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலில், வாசவி பிறந்த நாள் வாசவி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும், பால்குட ஊர்வலம் இன்று நடக்கிறது. கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்படும் பால்குட ஊர்வலம், தாதா முத்தியப்பன் சாலை, வரதா முத்தியப்பன் சாலை வழியாக ஆதியப்பன் சாலை வந்தடைகிறது. அத்துடன் வாசவி ஜோதியும் திருவள்ளூரில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது.