கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2014 03:05
ஆக்கூர்: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் கீழையூர் கிராமத்தில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் பூம்புகார் கடலில் இருந்துபுனிதநீர் எடுத்து வந்து கலசபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விநாயகர், முருகன், மாரியம்மன், பேச்சியம்மன், சரஸ்வதிதேவி, அக்னிவீரன் ஆகிய சாமிகளுக்கு கலசாபிசேகம் நடைபெற்றன. தொடர்ந்து மாரியம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.