கலசபாக்கம்: கலசபாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனாகிய திருமா முடீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடை பெறும் சித்திரை திருவிழா பிரம்மோற்சவம் கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி கள் ரிஷபம் உள் பட வாகனங் களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச் சியான 11–ம் தேதி திருத் தேர் பவனியும், 12–ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.