பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
குறிச்சி : மதுக்கரை, மரப்பாலம் அருகேயுள்ள தர்மலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா இன்று துவங்குகிறது. மதுக்கரை மரப்பாலம் அருகேயுள்ள தர்மலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், மாதம் தோறும் பிரதோஷம், பவுர்ணமி கிரிவலம், அமாவாசை மற்றும் மகா சிவராத்திரி, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சித்திரை மாத பவுர்ணமி விழாவும் நடக்கிறது. இவ்வாண்டு, இன்று மாலை 5.௦௦ மணிக்கு, முதற்கால வேள்வியுடன், இவ்விழா துவங்குகிறது. நாளை காலை 6.௦௦ மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்குகிறது. காலை 7.௦௦ மணிக்கு, கிரிவலம் துவங்குகிறது. முன்னதாக, அஷ்டலிங்கங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. ௮.௦௦ மணிக்கு அன்னதானம் துவங்குகிறது. இரவு 8.௦௦ மணிக்கு தர்மலிங்கேஸ்வரர் திருமஞ்சனம் மற்றும் திருமுறையோதலுடன் விழா நிறைவடைகிறது.