குருகிராம் மந்திரில் பிராண பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் செய்த சிருங்கேரி ஸ்ரீவிதுசேகர பாரதி மகாஸ்வாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2025 01:11
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, கும்பாபிஷேகத்தை சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி செய்து வைத்தார்.
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, இன்று குருகிராம் மந்திர் வந்தார். சுவாமிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் மரியாதையுடன் சுவாமி வரவேற்று ஆசி பெற்றனர். தொடர்ந்து, விதுசேகர பாரதி மகாஸ்வாமி, தாமரை கரங்களால் ஸ்ரீ வரசித்திவிநாயகர், ஸ்ரீ சாரதாம்பா, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீ வெங்கடேஷ்வரர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக தேவதைகளுக்கு பிராண பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் செய்தார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.