கோத்தகிரி : கோத்தகிரி முருகன் காலனி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 11ம் தேதி முதல் திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு காப்பு அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி மற்றும் மலர் வழிபாடு நிகழ்ச்சியை தொடர்ந்து, காலை 6:00 மணிமுதல் 7:30 மணிவரை சக்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பெருந்திருமஞ்சனம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடுகளை முருகன் காலனி, அக்கால், ஆர்.கே.சி., லைன் மற்றும் கோர்ஹவுஸ் பொதுமக்கள் செய்திருந்தனர்.