காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகன உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2014 02:05
காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோவிலில், ஹம்ச வாகன உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், இரணடாம் நாள் உற்சவமாக நேற்று ஹம்ச வாகன உற்சவம் நடந்தது.இதில், காலை 5:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹம்ச வாகனத்தில், வரதராஜ பெருமாள் எழுந்தருளி, முக்கிய வீதிகள் மற்றும் நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும், மாலை 5:30 மணிக்கு சூர்ய பிரபைஉற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 4:30 மணிக்கு, கருட சேவை உற்சவம் நடக்க உள்ளது.