திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமங்கள் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், சுதர்சன ஹோமம், மூலவர்க்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. பகல் 12 மணிக்கு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.