திருச்சுழி திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி வியாகுல மாதா கோயில் விழா 2 நாள்கள் வீதி உலாவுடன் நடைபெற்றது. மாதாவை வரவேற்கும் விதமாக வீடுகளுக்கு முன்பாக மெழுகுவர்த்தியேந்தியும், கையில் பூக்களுடனும் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சிறப்பு ஜெப ஆராதனை கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள், மாதாவின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்தனர்.