ஆரணி: ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆற்றுத் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி சுவாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வைத்து பக்தர்களால் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டுசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.