பதிவு செய்த நாள்
15
மே
2014
10:05
ஸ்ரீவில்லிபுத்தூர் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வையாளி சேவை நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மாண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக, ரெங்கமன்னார், ஆண்டாள் வையாளி சேவை நடப்பது வழக்கம். அதன்படி வையாளி சேவை நேற்று நடந்தது. இதில் ஆண்டாள், நீல பட்டுடுத்தி சேஷ வாகனத்திலும்,ரெங்க மன்னார், பச்சை பட்டுத்தி குதிரை வானத்திலும் மாடவீதி, கந்தாடை வீதி, ரதவீதிகள் வழியாக, வீதி உலா வர, ஆத்துக்கடை தெருவில் வையாளி சேவை நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, ஸ்தானிகம் ரமேஷ், சுதர்சனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.