பதிவு செய்த நாள்
15
மே
2014
02:05
தஞ்சாவூர்: தஞ்சை வெண்ணாற்றங்கரையிலுள்ள வீரநரசிம்ம பெருமாள் ஸ்வாமி கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரையில், வீரநரசிம்ம பெருமாள் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாக, வீரநரசிம்ம பெருமாள் ஸ்வாமி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாரத்தில் சனிக்கிழமைதோறும் பக்தர்கள் வீரநரசிம்ம பெருமாள் ஸ்வாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவிலில், நான்கு கால பூஜை நடக்கிறது, காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். இதையடுத்து, தற்போது சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக, நரசிம்ம ஜெயந்தி விழா கடந்த 13ம் தேதி விமரிசையாக நடந்தது. இதையொட்டி, வீரநரசிம்ம பெருமாள் ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.