பதிவு செய்த நாள்
15
மே
2014
01:05
கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் திருவிழா, கடந்த 5ம் தேதி, நித்ய உற்சவர் புறப்பாடுடன் துவங்கியது. தினமும், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. காலை, 5:30 மணிக்கு வேதபாராயணத்தை தொடர்ந்து, சுவாமி, தேரில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என, கோஷமிட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை, 7:30 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், முடிகாணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர். மாலையில், மதுரகவி ஆழ்வார் உற்சவ சாற்று முறையும், இரவில், பானக பூஜை அவரோகனமும் நடந்தன.