புதுக்கோட்டை: புதுக்கோட்டை மச்சுவாடி வண்டிப் பேட்டை குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இக்கோவில் சித்திரா பவுர்ணமி விழா கடந்த மாதம் 29–ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது.அதை தொடர்ந்து பக்தர்கள் நேற்று காலை சாந்தாராம்மன் சன் னதியில் இருந்து நையாண்டி மேளம், செண்டை மேளங்களுடன் திரளான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள், அக்னிசட்டிகள், முளைப் பாரிகள், பறவைக் காவடிகள் ஆகியவற்றை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.