விருத்தாசலம் : விருத்தாசலத்தை அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள சண்முகசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பவுர்மணி விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக செடல் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாகச் சென்று சண்முகசுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.