பதிவு செய்த நாள்
16
மே
2014
08:05
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில், கோவிந்தா, கோவிந்தா! கோஷத்துடன், சுவாமி ரங்கநாதர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், பாலமலை அரங்கநாதர் கோவில் உள்ளது. பழமையான மற்றும் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா, 7ம் தேதி துவங்கியது. தொடர்ந்து அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருடவாகனம், செங்கோதையம்மன் அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு யானை வாகன உற்சவமும், தொடர்ந்து சின்னத்தேர் உற்வசம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். விழாவையொட்டி நேற்று பரிவேட்டை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று (16ம் தேதி) சேஷ வாகன உற்சவம், தெப்போற்சவமும், நாளை சந்தனசேவை சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில், மலைவாழ் மக்களின், கிருஷ்ணலீலா பிருந்தாவன நிகழ்ச்சி தினசரி நடந்தது.