குன்னூர் : குன்னூர் அருகே கொலக்கம்பை பஜாரில் சக்தி விநாயகர், மாகாளியம்மன், முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது. கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 12ம் தேதி கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, கரகம் பாலித்தல் நடந்தன. 13ம் தேதி அம்மன் அழைப்பு, பால்குடம், மாவிளக்கு, அக்னி சட்டி பூவோடு ஊர்வலங்கள் நடந்தன. காலை 10:30 மணிக்கு அம்மன் ஆற்றுக்கு அழைத்தல், மஞ்சள் நீராடல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. வரும் 19ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.