பேரூர் : பூண்டி ஈஷாயோக மையத்தில், இசை விழா நடந்தது. சென்னை கோயம்பேட்டிலுள்ள திருக்கைலாய திருக்குடம் கோவிலைச் சேர்ந்த 56 இசைக்கலைஞர்கள், சிவனுக்கு உகந்த பூதகணங்கள் வாசித்த, வாத்தியங்களை, ஈஷாயோக மையத்தில் உள்ள சிவலிங்கம் முன்புறம் ஆடியபடி வாசித்தனர். இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் ரசித்தனர். தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டது.