கடலூர்: கடலூர் தூய சகாய அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. கடலூர், சாமிப்பிள்ளை நகரில் உள்ள தூய சகாய அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 16ம் தேதி திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை திருப்பலி நடந்தது. முக்கிய விழாவாக நேற்று முன்தினம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று திருப்பலி, கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது.