பதிவு செய்த நாள்
27
மே
2014
12:05
காஞ்சிபுரம்: அஷ்டபுஜ பெருமாள் கோவிலின் ராஜகோபுரத்தின் மீது, சரிந்துள்ள இடிதாங்கி இயந்திரத்தை சீரமைத்து, பொருத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சிபுரம் நகரத்தின் மையப்பகுதியில், 108 வைணவ தேசங்களில் ஒன்றான அஷ்டபுஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நிர்வாகம் பரம்பரை அறங்காவலர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரத்தில், மின்னல் தாக்காமல் இருப்பதற்காக, இடி தாங்கி பொருத்தப்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றின் காரணமாக, இந்த இடிதாக்கி சரிந்து விழுந்துள்ளது.மழைக்காலம் நெருங்கும் வேளையில், இடி தாங்கியை சீரமைக்க வேண்டும் எனவும், இதேபோன்று, நகரத்தில் உள்ள முக்கிய கோவில்களின் ராஜகோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள இடி தாங்கிகளை, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மண்டல இணை ஆணையர் செந்தில் வேலன் கூறுகையில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலின் ராஜகோபுரத்தில், சரிந்துள்ளதாக கூறப்படும் இடிதாங்கி குறித்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோவில்களின் இடி தாங்கிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.