சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2014 02:05
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனை வழிபாடு நடந்தது. இரவு 8 மணிக்கு வண்ண மின்விளக்கு அலங்கார ரதத்தில் அம்மன் எழுந்தருள, பெண்கள் பலவகை பூத்தட்டுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அம்மனுக்கு புஷ்பயாகம், சிறப்பு பூஜைகளை பூஜாரி கணேசன் நடந்தினார். ஏற்பாடுகளை நகரத்தார்கள் சங்கம், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் சுந்தர், நாகராஜ், பூபதி செய்திருந்தனர்.