காளையார்கோவில் : காளையார்கோவிலில் பா.ஜ., - நமோ பேரவை சார்பில் பிரதமராக மோடி பதவியேற்றயதையடுத்து சொர்ணகாளீஸ்வரர்கோவில் தாமரை பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாத கோபாலன் தலைமையில் அபிஷேகம் நடந்தது.பஸ் ஸ்டாண்டில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயா,நமோ பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மாவட்டதலைவர் கவியரசன், துணை தலைவர்கள் கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.