ஜூன் 3ல் திருமோகூர் கோயில் வைகாசி பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2014 12:05
மதுரை : மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா ஜூன் 3ல் துவங்கி 13 வரை நடக்கிறது. கோயில் நிர்வாக அதிகாரி செல்வி கூறியதாவது: ஜூன் 3ல் காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. ஜூன் 4ல் காலை 9 மணிக்கு பல்லக்கில் ராஜாங்க சேவை. ஜூன் 5 மற்றும் ஜூன் 6ல் காலை 9 மணிக்கு பல்லக்கு. ஜூன் 7 ல் காலை 9 மணிக்கு பல்லக்கு ராஜாங்க சேவை. ஜூன் 8ல் காலை 9 மணிக்கு பல்லக்கு. இரவு 8 மணிக்கு பெருமாளுக்கு யானை வாகனம் ஆண்டாளுக்கு புஷ்ப பல்லக்கு திருவீதி வலம் வந்த பிறகு குடவரை வாசல் முன்பு மாலை மாற்றுதல்.ஜூன் 9ல் இரவு மணிக்கு வைரச்சப்பரம். மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி நம்மாழ்வருடன் ஸ்தபன திருமஞ்சனம். ஜூன் 10ல் காலை 9 மணி பல்லக்கு. இரவு 7 மணிக்கு மோகினி திருக்கோலம். இரவு 8 மணிக்கு குதிரை வாகனம் திருவீதி புறப்பாடு.ஜூன் 11ல் காலை 9.25 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் தேருக்கு எழுந்தருளல். மதியம் 2.40 மணிக்கு தேர் வடம் பிடித்தல். ஜூன் 12ல் காலை 9.30 மணிக்கு திருமஞ்சனம். ஸ்ரீ சடகோபர் திருப்பாற்கடலில் எழுந்தருளி திருமஞ்சனம். ஜூன் 13ல் பகல் 12 மணிக்கு மேல் பகல் 12.30 மணிக்குள் உற்சவசாந்தி ஆலங்கார திருமஞ்சனம் முடிந்து ஆஸ்தானம் சேருதல். ஏற்பாடுகளை தக்கார் கருணாநிதி, நிர்வாக அதிகாரி செய்து வருகின்றனர், என்றார்.