சித்ரா பவுர்ணமி தினத்திற்கு சித்ராபூரணை என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதம், தேவர்களுக்கு பகல் 15 முதல் 20 நாழிகை வரையுள்ள ஐந்து நாழிகை பொழுதாகும். அதாவது, இம்மாதம் தேவர்களுக்கு மதிய வேளையாகிறது. மதிய வேளை பிதுர்தர்ப்பணம் செய்ய உகந்தது என்பதால், இந்நாள் தர்ப்பணம் செய்ய மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தாயாருக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. இதனால் பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து, ஆசிர்வதிப்பர் என்பது ஐதீகம்.