தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சித்ரகுப்தருக்கு கோயில்கள் உள்ளன. இவர் எமதர்மராஜாவின் பிரதிநிதியாக இருந்து, மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை ஒழுங்கு செய்பவர். சித்ராபவுர்ணமி அன்று பிறந்தவர். தேனி - போடி ரோட்டிலுள்ள கோடாங்கிபட்டியிலும் காஞ்சிபுரத்திலும் இவருக்கு கோயில்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகாமி அம்பாள் சன்னதி அருகில் சித்ரகுப்தருக்கு தனி சன்னதி இருக்கிறது.