பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா ஜூன் 2 இரவு 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல், ஜூன் 10ல் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், இரவு 10 மணிக்கு வைகை ஆற்றில் அம்மன் எழுந்தருளல், இரவு 2 மணிக்கு பூப்பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.ஜூன் 11ல் பூக்குழி இறங்குதல், இரவு அலங்கார ரதத்தில் உலா, ஜூன் 17 தேரோட்டம், ஜூன் 18 மஞ்சள் நீராட்டுவிழா, இரவு 11 மணிக்கு பொன்னுாஞ்சல் தீர்த்தாவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை தக்கார் செந்தில்குமார், நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் சுந்தர், பூபதி, தர்மராஜ் செய்துள்ளனர்.