பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
ஸ்ரீபெரும்புதுார் : வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐந்தாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம், நாளை மறுநாள் 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கப்பெருமாள் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை. இக்கிராமத்தில், பழமைவாய்ந்த, சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, வள்ளி தெய்வானை உடனுறை, சுப்பிரமணிய சுவாமி 7 அடி உயரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா, நாளை மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கி, 14ம் தேதி வரை, நடைபெற உள்ளது.விழாவினை முன்னிட்டு, இன்று இரவு கிராம தேவதை உற்சவமும், வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
நாள் காலம் உற்சவம் ஜூன் 2 மாலை வெள்ளி மயில் வாகனம்
ஜூன் 3 காலை சூரிய பிரபை மாலை சந்திர பிரபை
ஜூன் 4 காலை கேடயம் மாலை ஆடு வாகனம்
ஜூன் 5 காலை கல் கேடயம் மாலை நாக வாகனம்
ஜூன் 6 காலை கேடயம் மாலை அன்ன வாகனம்
ஜூன் 7 காலை கேடயம் மாலை யானை வாகனம்
ஜூன் 8 காலை திருத்தேர்
ஜூன் 9 காலை கேடயம் மாலை குதிரை வாகனம்
ஜூன் 10 காலை கேடயம் மாலை மயில் வாகனம்
ஜூன் 11 காலை தீர்த்தவாரி மாலை கொடி இறக்குதல், புஷ்ப பல்லக்கு
ஜூன் 12 மாலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
ஜூன் 13 மாலை ஸ்தல விருட்சம் - திருவூடலுற்சவம்
ஜூன் 14 காலை விடையாற்றி உற்சவம் மாலை சுவாமி திருவீதி உலா.