திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, சிலர் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இந்த தலைமுடியை கோவில் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும், பொது ஏலத்திற்கு விடுகிறது.அந்த வகையில், இந்தாண்டிற்கு தலைமுடி காணிக்கை ஏலம் நேற்று கோவில் அலுவலக வளாகத்தில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில், சென்னையை சேர்ந்த விக்ரம்ராஜ் என்பவர், 2.26 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு, 1.98 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு, கோவிலுக்கு, 28 லட்சம் ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.