பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி வைபவம் வரும் 13ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கங்கையம்மன், சக்தி விநாயகர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அய்யப்பன், ஏமப்பேர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வர், முடியனூர் அருணாசலேஸ்வரர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதி ஈஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர், சின்ன சேலம் கங்காதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவில்களில் வரும் 13ம் தேதி குரு பெயர்ச்சி வைபவம் நடக்கிறது. குரு பெயர்ச்சி அன்று பரிகாரம் செய்யப்பட வேண்டிய ராசியினர்களுக்கும் பரிகார பூஜைகள் செய்து வைக்கப்படுகிறது. கோவில்களின் சம்ராதாயப்படி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.