பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
அரியலூர்: கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் வரும், 2ம் தேதி பாலாலயம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில், அருந்தவநாயகி உடனமர் ஆலந்துறையார் சிவன்கோயில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலானதால், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் திருப்பணி துவங்கப்படவுள்ளது. அதையொட்டி, கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில் பாலாலயம் ஜூன், 2ம் தேதி நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனம் தேவஸ்தான கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமி முன்னிலையில் நடைபெறும் பாலாய நிகழ்ச்சிக்கான உபயதாரர்களாக கீழப்பழுவூர் தொழிலதிபர் ரவிச்சந்திரன், செல்வகாந்தி, முரளி, சுதா, சத்தியமூர்த்தி, சாந்தி மற்றும் திருஞானசம்பந்தர் அறநெறி வாரவழிபாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செயல்படுகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் செய்கிறார்.