பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 25ம் தேதி, சக்தி அழைத்தலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால் குடம் ஊர்வலம் என, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று, மாலை 6 மணிக்கு, மகாசக்தி மாரியம்மன் கோவில் முன் இருந்த தீக்குண்டத்தில், 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் திருப்பணிக் குழு தலைவர் ஆண்டவர், கவுன்சிலர் மீனா தியாகராஜன், கோவில் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் என, பலர் கலந்து கொண்டனர்.