பெரம்பலூர்: எளம்பலூர், சமத்துவபுரம் பகுதியில், மகாலிங்க சித்தர் சுவாமி மலையடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வலம்புரி விநாயகர் கோவில், மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த, 31ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் துவங்கியது. கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பெரம்பலூர், எளம்பலூர், வடக்குமாதவி மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக இயக்குநர் தயாளன் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.