பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
திருச்சி: திருச்சி, வயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்சி மாவட்டம், திருவரங்கம், குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, இன்று காலை, 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, தினசரி இரவு, 8 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய ஸ்வாமி திருவீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாள், ஜூன், 10ம் தேதி, காலை ரதாரோகணமும், மாலை, 4.35 மணிக்கு, தேரோட்டமும் நடைபெறும். 11ம் தேதி தீர்த்தவாரி, பக்தர்கள் பால்காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். 12ம் தேதி மாலை, 5.30 மணிக்கு சங்காபிஷேகம், இரவு தெப்ப உற்சவம் நடைபெறும். நிறைவு நாளான, 13ம் தேதி இரவு, 9 மணிக்கு ஆளும் பல்லக்கு விழா நடைபெறும். விழாவையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடைபெறும்.