திருவாடானை : திருவாடானை அருகே பெருவாக்கோட்டை லட்சுமிபுரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் லட்சுமி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகத்தையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை திருக்குடம் புறப்பாடு நடந்தது. காலை 9.45 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. பெருவாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்ணதாŒன் நற்பணி மன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம், ஆன்மிக சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை ஆயிர வைசிய மஞ்சபுத்தூர் மகாசபையினர் செய்திருந்தனர்.