பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
02:06
உடுமலை : உடுமலை அருகே அடிவள்ளியில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. உடுமலை, அடிவள்ளி கிராமத்தில், பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இதற்கான விழா, மே 30ம் தேதி வாஸ்து சாந்தி, மகாபலி சாந்தி, கிராம சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. மே 31ல் வாசுதேவ புண்ணிய ஆவாஹனம், மகாலட்சுமி பூஜை, பிருந்தாவனம் சென்று ஸ்ரீதேவி, பூதேவியை அழைத்து வருதல், கலசத்தில் தேவியரையும், சுவாமியையும் எழுந்தருளச்செய்தல், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை மற்றும் திவ்ய பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடந்தன. நேற்றுமுன்தினம் காலை திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை, திருமஞ்சனம், சயனவாசம், ஊஞ்சல்சேவை, திருவாய் மொழி பாராயணம், மூன்றாம்கால யாக பூஜைகள் நடந்தன; இரவு தெய்வீக நடன நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை விஷ்ணு சகஸ்ரநாமம், நான்காம் கால யாக பூஜைகளும், காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் மகாகும்பாபிேஷகமும் நடந்தது.