புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2014 12:06
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலயத்தில் கொடியேற்று விழா நடந்தது. சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு பெருவிழாயொட்டி நேற்று மாலை கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. பங்குதந்தை பால்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் அந்தோணிசாமி பீட்டர் அபீர் கலந்து கொண்டு, கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஆலயத்துக்கு ஊர்வலமாக வந்தனர். கொடியை திருப்பலி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து, கொடி பவனியாக கொண்டு வந்து கொடிமரத்தில் மாலை 7 மணிக்கு ஏற்றி வைத்தனர். வாணவேடிக்கை மற்றும் கோலாட்டம் நடந்தது.பங்கு தந்தைகள் லூர்துஜெயசீலன், அந்தோணிராஜ், சவரிமுத்து, திருத்தல அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், காரியக்காரர்கள், பங்கு மக்கள் மற்றும் ஊர்பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.