புதுச்சேரி: லாஸ்பேட்டை சின்மயா சூர்ய கோவிலில் ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் செல்லும் சாலையில் சின்மயா சூர்ய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாருதி பஜனை மண்டலி சார்பில் திருக்கல்யாண உற்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியையொட்டி, காலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், திருப்பாவை, சேவாகாலம், சாற்றுமுறை நடந்தது. காலை 8.00 மணிக்கு சூர்ய நமஸ்காரம், சுதர்சன ஹோமம், 11.00 மணிக்கு, சீதா ராமச்சந்திர மூர்த்தி, அலர்மேல்மங்கா, பத்மாவதி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், புவனேஸ்வரி பீடத்தின் ஸ்ரீ ராமானந்த பாரதி மகாசுவாமிகள் தலைமையில் ஆசியுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாச ராகவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.